ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்காளம் வருகை
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) மேற்கு வங்காளம் செல்கிறார்.
காலை நேதாஜி பவனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவு இல்லத்திற்கும் செல்வார் என சொல்லப்படுகிறது. சிறுஓய்வுக்குபின் மாலையில் நேதாஜி உள்விளையாட்டரங்கத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை பெறுகிறார்.
மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை சுவாமி விவேகானந்தர் நிறுவிய ேபளூர் மடம் செல்கிறார். பின்னர் யூகோ வங்கி 80 ஆண்டுகால நிறைவு விழாவில் கலந்துகொள்கிறார்.
மாலையில் புகழ்பெற்ற சாந்திநிகேதன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறார்.
Related Tags :
Next Story