ஆந்திரா, தெலுங்கானாவில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

Image Courtesy: ANI
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்,
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் மற்றும் ஆந்திராவின் கர்னூல், குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அந்த பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்துகின்றர்.
இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷதுல்லா, முகமது இம்ரான் மற்றும் முகமது அப்துல் மொபின் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கர்னூல் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பொது மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை திரும்ப செல்லுமாறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story






