"பொருளாதார வெற்றிக்கு இயற்கை விவசாயமும் அடிப்படையானது" - பிரதமர் மோடி


பொருளாதார வெற்றிக்கு இயற்கை விவசாயமும் அடிப்படையானது - பிரதமர் மோடி
x

இனி வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் என்பது ஒரு வெற்றிகரமான இயக்கமாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், இனி வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் என்பது ஒரு வெற்றிகரமான இயக்கமாக மாறும் என்றும், இதனை மேற்கொள்ளும் விவசாயிகள் இதன் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.

இயற்கை விவசாயம் என்பது நமது பூமித்தாய்க்கு செய்யும் சேவையை போன்றது என்று தெரிவித்த அவர், இதன் மூலமாக மண்ணின் தரம், உற்பத்தி ஆகியவற்றை உயர்த்த முடியும் என்று கூறினார். மேலும் பொருளாதார வெற்றிக்கு இயற்கை விவசாயமும் அடிப்படையானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Next Story