ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.!
மாணவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டா,
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் புஷ்பேந்திர சிங். 17 வயதான இவர் நீட் தேர்வுக்கு தயார் ஆவதற்காக கோட்டா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அருகே இருந்த பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
இதனிடையே, அவர் தங்கியிருந்த அறைக்கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கு புஷ்பேந்திர சிங் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story