'சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே ஒடிசா ரெயில் விபத்திற்கான பிரதான காரணம்' - விசாரணை அறிக்கை வெளியீடு


சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே ஒடிசா ரெயில் விபத்திற்கான பிரதான காரணம் - விசாரணை அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 6 July 2023 1:57 PM GMT (Updated: 6 July 2023 1:59 PM GMT)

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணை நடத்தினார்.

புதுடெல்லி,

கடந்த ஜூன் 2-ந்தேதி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பாஹனாக பஜார் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் ரெயிலின் சில பெட்டிகள் அவ்வழியாக சென்ற பெங்களூரு-ஹவுரா ரெயில் மீதும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த கோர ரெயில் விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி விசாரணை நடத்தினார். இந்நிலையில் இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

40 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை கடந்த ஜூன் 29-ந்தேதி ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே விபத்திற்கான பிரதான காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story