2022-23-ம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ரூ.19.68 லட்சம் கோடியாக உயர்வு
2022-23-ம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ரூ.19.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பெருநிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு, பொருளாதாரத்தின் ஆரோக்கியநிலை காரணமாக, நாட்டில் 2022-23-ம் நிதியாண்டில் மொத்த நேரடி வரி வருவாய் ரூ.19.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மறுநிதியளிப்புக்கு முந்தைய இந்த வசூல், கடந்த நிதியாண்டின் மொத்த நேரடி வரி வருவாயான ரூ.16.36 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 20.33 சதவீத அதிகரிப்பாகும்.
உலக அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டபோதிலும், இந்தியாவில் உள்நாட்டு தேவை அதிகரிப்பால், கொரோனாவுக்குப் பிறகு பொருளாதாரம் சிறப்பாக மீட்சி கண்டிருப்பதை இந்த வரி வருமானம் காட்டுகிறது.
மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story