மக்களே கவனமா இருங்க.. கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்..!


மக்களே கவனமா இருங்க.. கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்..!
x

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று இரவு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நிபா வைரசால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் ஆய்வுக்காக புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலையில் அதன் முடிவுகள் வெளியாகும். அதன்பிறகே, அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன? என்பது உறுதி செய்யப்படும்.

இறந்தவர்களின் உறவினர்களில் ஒருவரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று இரவு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கு முன்பு 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கோழிக்கோட்டில் 2018ம் ஆண்டு மே மாதம் 19ம்தேதி முதல் முறையாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிபா வைரஸ் தொற்று, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இதேபோல், அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடி தொடர்பு மூலமாகவோ ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.


Next Story