இந்தியாவில் சர்வதேச தரத்தில் மருந்து தரம் - நிதி ஆயோக் பரிந்துரை


இந்தியாவில் சர்வதேச தரத்தில் மருந்து தரம் - நிதி ஆயோக் பரிந்துரை
x

சர்வதேச தரத்துக்கு ஈடாக இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறை தர நிலைகள் இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

அதே நேரத்தில் சர்வதேச ஒத்திசைவு வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. இந்தியாவில் மருத்துவ சாதனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு என்று தனியாக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் சிபாரிசு செய்துள்ளது.

புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அழகுசாதனப்பொருட்கள் மசோதா, 2023-ன் மீது அமைச்சகங்களுக்கு இடையே நடந்து வருகிற கலந்தாலோசனையின்போது இந்த பரிந்துரைகளை நிதி ஆயோக் செய்துள்ளது.

இதுபற்றி அதிகார வட்டங்கள் தெரிவிக்கையில், "உலகளாவிய தரங்களை பின்பற்றுகிறபோது, அது மருந்துகள் ஏற்றுமதியை மேலும் பெருக்கும். மேலும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மருந்துகளின் தரத்தையும் உறுதி செய்யும்" என தெரிவித்தன.


Next Story