சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்- நிதின் கட்கரி தகவல்
வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு நடத்தி வருவதாக கட்கரி தெரிவித்தார்.
சென்னை,
சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய முன்னோடி திட்டத்தை அரசு நடத்தி வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ஐஏசிசி) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கூறுகையில், வாகனங்கள் பயணித்துள்ள சரியான தூரத்திற்கு மட்டுமே உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரம் அமைப்புக்கான முன்னோடித் திட்டத்தை அரசாங்கம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் வகையில், தானியங்கி நம்பர் பிளேட் ரெகக்னிஷன் அமைப்பின் (தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்) முன்னோடித் திட்டத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நடத்தி வருவதாக கட்கரி தெரிவித்தார்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கட்டணம் வசூலிக்கவும் முடியும் என கட்கரி கூறினார்.