பீகாரில் மந்திரி பதவி கிடைக்காததால் நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா செய்வதாக மிரட்டல்!


பீகாரில் மந்திரி பதவி கிடைக்காததால் நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா செய்வதாக மிரட்டல்!
x

பீகாரில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ பீமா பார்தி, மந்திரி சபையில் தான் இடம்பெறாததால் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

பாட்னா,

பீகாரில் யாரும் எதிர்பாராதவிதமாக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்திரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிதாக கூட்டணி அரசை அமைத்துள்ளது.

இந்த நிலையில், பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ பீமா பார்தி, மந்திரி சபையில் தான் இடம்பெறாததால் வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பீகார் மந்திரி சபையில் 31 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இந்த நிலையில், புதிய அரசாங்கத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மந்திரியாக ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ஐந்து முறை எம்.எல்.ஏவான லெஷி சிங் பதவியேற்றார்.


அவருக்கு 3வது முறையாக மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் பீமா பார்தி அதிருப்தியில் உள்ளார்.அவர் லெஷி சிங்கைக் கண்டித்தார்.

இது குறித்து எம்.எல்.ஏ பீமா பார்தி பேசுகையில், " ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏவான லெஷி சிங் மந்திரி சபையில் எப்போதும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதனால் அவர் மீது நான் அதிருப்தியில் உள்ளேன். முதல் மந்திரி அப்படி அவரிடம் என்ன கண்டுவிட்டார்?

லெஷி சிங் தன் பகுதியில் நடக்கும் சம்பவங்களிn மூலம், பலமுறை கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார். நாங்கள் கூறுவது ஏன் கேட்கப்படவில்லை? நாங்கள் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் காரணமா?

லெஷி சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்காவிட்டால் கட்சியில் இருந்து நான் விலகுவேன்.அவர் மீதான எனது குற்றச்சாட்டு தவறு என்றால் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்" என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு சவால் விட்டுள்ளார்.


Next Story