நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய ஜனதாதளத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

கோப்புப்படம்
ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஒப்புதலுடன் இந்த நியமனம் நடந்துள்ளது.
பாட்னா,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஒப்புதலுடன் இந்த நியமனம் நடந்துள்ளது.
இதில் முக்கியமாக நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பரும், மாநிலங்களவை உறுப்பினருமான வஷிஷ்த் நாராயண் சிங், கட்சியின் தேசிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக மங்காணி லால் மண்டல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐக்கிய ஜனதாதளத்தின் மிக முக்கிய பிரபலமான கே.சி.தியாகி கட்சியின் அரசியல் ஆலோசகராகவும், செய்தி தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய நிர்வாகிகள் அறிவிப்பில் முக்கிய அம்சமாக, கட்சியின் பொதுச்செயலாளர் எண்ணிக்கை 20-ல் இருந்து 11 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story






