எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமார் முயற்சிக்கு பா.ஜ.க. பதிலடி


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமார் முயற்சிக்கு பா.ஜ.க. பதிலடி
x

நாடு இப்போது நிலையான அரசைத்தான் விரும்புகிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "நாட்டில் 2024-ம் ஆண்டில் பிரதமர் பதவி காலியாக இருக்காது. பிரதமர் மோடி மீண்டும் பதவிக்கு வருவார். இந்த நாட்டில் பகல் கனவு காண்பதற்கு தடை ஏதாவது இருக்கிறதா, என்ன?" என கூறினார்.

மேலும், " இது தேவகவுடா காலம் அல்ல, குஜ்ரால் காலமும் இல்லை என்பதை நிதிஷ் குமாருக்கு நினைவுபடுத்துகிறேன். நாடு இப்போது நிலையான அரசைத்தான் விரும்புகிறது" எனவும் தெரிவித்தார்.


Next Story