அரியானாவில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


அரியானாவில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
x

கோப்புப்படம் 

காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் இன்று விவாதத்திற்கு வந்தது.

சண்டிகர்,

அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக மனோகர் சிங் லால் கத்தார் உள்ளார். அரியானாவில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அரியானா சட்டபேரவையில் எடுத்து வைக்கப்பட்டு காரசார வாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அரியானாவில் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. மனோகர் லால் கட்டார் ஆட்சியில் காங்கிரஸ் கொண்டு வந்த இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவாகும். காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் இன்று விவாதத்திற்கு வந்தது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற நீண்ட விவாதத்தின் முடிவில், முதல்-மந்திரியின் பதிலால் அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் கியான் சந்த் குப்தா தெரிவித்தார்.

அரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏக்களும் கூட்டணி கட்சியான ஜன்னாயக் ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.


Next Story