காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன்? - ஹா்திக் படேல் பரபரப்பு பேட்டி
காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என ஹா்திக் படேல் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஆக இருந்த ஹர்திக் படேல் இன்று காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரசில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.
குஜராத் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாகவும், தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினாா். சமீபத்தில் அவர், தன் பெயருடன் இருந்த 'காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்' என்ற தலைப்பை டுவிட்டரில் இருந்து நீக்கி இருந்தாா். இந்த நிலையில், ஹர்திக் படேல் விரைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டாில் தொிவித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கு அளித்துள்ளதாக தொிவித்துள்ளாா். இதுகுறித்து தனது டுவிட்டா் பதிவில், "நான் தைாியமாக, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளா்களும், குஜராத் மக்களும் வரவேற்பாா்கள். இதன் பிறகு நான் சிறப்பாக சேவையை மக்களுக்கு செய்ய முடியும் என நம்புவதாக அவா் தொிவித்துள்ளாா்.
இந்த நிலையில் அவா் செய்தியாளா்களை சந்தித்தாா். அதில் பேசிய அவா்,
காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும், கட்சியின் தலைவர்கள் அதானி அம்பானி போன்ற குஜராத் மக்களுக்கு எதிராக உள்ளாா்கள் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியில் சாதி அரசியல் அதிகம் உள்ளது எனவும், இந்த கட்சியில் 3 ஆண்டுகள் வீணடித்து விட்டதாகவும் தொிவித்தாா்.
குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கு சிக்கன் சாண்ட்விச்களை ஏற்பாடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறினர்.
குஜராத்தில் ஆளும்கட்சியான பாஜக மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகளில் எந்த கட்சியில் இணைய உள்ளீா்கள் என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் வேறு எந்த கட்சியிலும் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. என கூறினாா்.