கர்நடக பாஜக தலைவர் மாற்றமா? முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பதில்


கர்நடக பாஜக தலைவர் மாற்றமா?  முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பதில்
x

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

பெங்களூரு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பசவராஜ் பொம்மையின் தலைமையை மாற்றிவிட்டு, புதிய முதல்-மந்திரியை நியமிக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள பசவராஜ் பொம்மை, அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எனது தலைமையில்தான் பாஜக சந்திக்கும் என்று மேலிட தலைவர்கள் உறுதியளித்து இருப்பதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில், கர்நாடக பாஜக தலைவர் நலின் குமார் கடீல் மாநில தலைவராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு ஆகியுள்ளது. இதையடுத்து அவரை வாழ்த்திய பசவராஜ் பொம்மை, மாநிலத்தில் பாஜகவின் அமைப்புகள் மாற்றுவது குறித்தோ.. மாநில தலைவரை மாற்றுவது குறித்தோ எந்த ஆலோசனையும் நடக்கவில்லை" என்றார்.

1 More update

Next Story