மராட்டியத்தில் அரசியல் நிலையற்ற தன்மை இல்லை - மந்திரி உதய் சாமந்த்
மராட்டியத்தில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவவில்லை என மந்திரி உதய்சாமந்த் கூறியுள்ளார்.
நிலையற்ற தன்மை இல்லை
மராட்டிய மந்திரி உதய் சாமந்த் நேற்று ரத்னகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்து இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
அரசியலில் நிலையற்ற தன்மை நிலவும் போது இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் ஷிண்டே-பட்னாவிஸ் அரசுக்கு 172 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ள போது மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே இடைத்தேர்தல் பற்றி பேசுவது தேவையில்லாததது.
தேர்தலின் போது முடிவு
தேர்தலின் போது அரசியல் கட்சிகள் எல்லா இடங்களிலும் போட்டியிட விரும்பும். அதில் தவறில்லை. ஷிண்டே அணி - பா.ஜனதா தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் வரும் போது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முடிவு எடுப்பார்கள்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாட்டிலேயே மூத்த அரசியல் தலைவர். அவரை சந்திப்பதில் எந்த சிரமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.