40 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.கவில் சேர திட்டம் "உண்மை இல்லை" அஜித்பவார் மறுப்பு


40 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.கவில் சேர திட்டம் உண்மை இல்லை அஜித்பவார் மறுப்பு
x

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் தனது மருமகனும், மராட்டிய முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாரின் அடுத்த அரசியல் நடவடிக்கை குறித்த ஊகங்களை நிராகரித்தார்.

மும்பை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரின் மருமகனும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும்கான அஜித்பவார், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல் மந்திரியாகும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு சரத்பவார் ஆதரவளிப்பாரா அல்லது கட்சியில் பிளவு வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்.எல்.ஏ.க்களில் சுமார் 40 பேர் அஜித் பவாரின் முயற்சிக்கு ஆதரவளிக்க ஒப்புதல் கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் தனது மருமகனும், மராட்டிய முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாரின் அடுத்த அரசியல் நடவடிக்கை குறித்த ஊகங்களை நிராகரித்தார்.

தேசியவாத காங்கிரசை விட்டு செல்லப்போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. தேசியவாத காங்கிரசில் இருக்கிறேன். இக்கட்சியிலேயே நீடிப்பேன்.எந்த எம்.எல்.ஏ.,விடமும் கையெழுத்து வாங்கவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்திக்க வந்தனர்.

இது வழக்கமான நடவடிக்கை. வேறு எந்த காரணத்திற்காகவும் அவர்கள் வரவில்லை. இனியாவது அனைத்து வதந்திகளையும் நிறுத்த வேண்டும்.இது போன்ற வதந்திகளால், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர்.

சரத்பவார் தலைமையில், கட்சி உருவாக்கப்பட்டது. பல முறை மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும், திர்க்கட்சியாகவும் இருந்து உள்ளது. வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயிகள் பிரச்னையை திசைதிருப்ப இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story