யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட 55 பண்ணை வீடுகள் இடிப்பு
யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட 55 பண்ணை வீடுகள் இடிக்கப்பட்டன.
நொய்டா,
தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள உத்தரபிரதேச எல்லைப்பகுதிகளில் யமுனை நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை உத்தரபிரதேச அரசு இடித்து வருகிறது. நொய்டா ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 55 பண்ணை வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளில் 9 ஜே.சி.பி. எந்திரங்கள் மற்றும் 150-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடபடுத்தப்பட்டு உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story