மராட்டிய அரசு மீது ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் உள்ளனர்; தேவேந்திர பட்னாவிஸ்


மராட்டிய அரசு மீது ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் உள்ளனர்;  தேவேந்திர பட்னாவிஸ்
x

நள்ளிரவில் வெளியான முடிவுகளில் பாஜக நிறுத்திய 3 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்.

மும்பை,

மராட்டியத்தில் ஆளும் மகா விகாஸ் கூட்டணியை (எம்விஏ) சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் விதிகளை மீறி வாக்களித்ததாக பாஜக புகார் தெரிவித்தது. இதனால் மராட்டியத்தில் 6 இடங்களுக்கு நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வரும் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

நள்ளிரவில் வெளியான முடிவுகளில் பாஜக நிறுத்திய 3 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர். இது சிவசேனாவுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா ஓர் இடத்தை வென்றன. தேர்தல் முடிவுகள் பாஜகவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், சிவசேனா கடுமையாக சாடி வருகிறது. தேர்தல் ஆணையமும் உடந்தையாக செயல்பட்டதாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ' மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் மட்டும் அல்ல, ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களே அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story