பொதுசிவில் சட்டம் கொண்டு வர இதுதான் சரியான நேரம்: முக்தர் அப்பாஸ் நக்வி


பொதுசிவில் சட்டம் கொண்டு வர இதுதான் சரியான நேரம்: முக்தர் அப்பாஸ் நக்வி
x

நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர இதுதான் சரியான நேரம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர இதுதான் சரியான நேரம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த இதுவே சரியான நேரம். இந்த சட்டம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை. அனைவருக்குமான சமத்துவம் மற்றும் நீதியை பொது சிவில் சட்டம் உறுதி செய்யும். பொது சிவில் சட்டம் ஒரு முற்போக்கான சட்டம்" என்று கூறினார்.


Next Story