உ.பி.யை சேர்ந்தபிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் அமித்ஷாவுடன் சந்திப்பு: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்


உ.பி.யை சேர்ந்தபிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் அமித்ஷாவுடன் சந்திப்பு: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்
x

உத்தரபிரதேசத்தை சேர்ந்தபிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற இருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்களில் ஒருவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை தனது மகனுடன் சந்தித்து பேசினார்.

அத்துடன் தனது சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதாக அறிவித்தார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்த அவர், இதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட பிற தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

கிழக்கு உத்தரபிரதேசத்தில் கணிசமாக வாழும் ராஜ்பர் சமூகத்தின் ஆதரவு பெற்றவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு கூடுதல் பலமாக இருப்பார் என கருதப்படுகிறது.


Next Story