ஒடிசா: ரூ.2,149 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்த முதல்-மந்திரி


ஒடிசா:  ரூ.2,149 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்த முதல்-மந்திரி
x
தினத்தந்தி 21 Feb 2024 3:00 AM IST (Updated: 21 Feb 2024 3:26 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ரூ.263 கோடி மதிப்பிலான 21 திட்ட பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் மேற்கே பார்கார் மாவட்டத்தின் கானபாலி நகருக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று சென்றார். அவர் ரூ.2,149 கோடி மதிப்பிலான 62 திட்ட பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார்.

இதுதவிர ரூ.263 கோடி மதிப்பிலான 21 திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல்லும் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒடிசாவில் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்து நீர்ப்பாசன திட்டங்களும் நீர்ப்பாசனத்திற்கான ஒரு வரலாற்றை உண்டு பண்ணும் என பேசியுள்ளார்.

இதேபோன்று மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசனம் பெறும் வகையில், கங்காதர் மெஹர் நீர்ப்பாசன திட்டம் ஆனது ரூ.1,676.42 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது.

விவசாயிகள், மிஷன் சக்தி பெண் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா திட்டம் மாநிலத்தின் 4 கோடி மக்களுக்கு ஆசீர்வாதம் ஆக உள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் லட்சுமி பஸ் திட்டம் உள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.


Next Story