ஒடிசா: சக மாணவிகள் ராகிங் செய்ததால், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


ஒடிசா: சக மாணவிகள் ராகிங் செய்ததால், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஒடிசாசக மாணவிகள் ராகிங் செய்ததால், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புவனேஸ்வர்,

புவனேஸ்வரில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியில் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு தற்கொலை கடிதத்தையும் போலீசார் மீட்டனர்.

அதில், தன்னுடன் படிக்கும் சீனியர் மாணவிகள் 3 பேர் தன்னை ராகிங் செய்து, மன ரீதியாக மிகவும் துண்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால், தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. மேலும் மூவரும் விடுதியில் தங்கியவர்களா என்பதும் தெரியவில்லை.

கல்லூரி முதல்வர் கூறுகையில், கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்றும், மாணவி அப்படி எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

கட்டாக்கில் தங்கியுள்ள அவரது தாயார் புவனேஸ்வரில் உள்ள படகடா காவல் நிலையத்தில், முறையான விசாரணை நடத்தி தனது மகளின் மரணத்திற்கு காரணமான மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story