ஒடிசா ரெயில் விபத்து - பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு...!
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு
புவனேஸ்வர்,
ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த பிஜய் பஸ்வான் என்பவர் ஜுன் 13 அன்று உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 289 ஆக இருந்தது.மேலும் இன்று பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதனால் ஒடிசா ரெயில் விபத்தில் பலியனோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்னும் 80க்கும் மேற்ப்பட்ட உடல்கள் அடையாளம் காணாமல் உள்ளன
Related Tags :
Next Story