ஒடிசா: இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை கோரி உக்ரைன் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
இந்தியப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு புவனேஷ்வரில் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
புவனேஷ்வர்,
ரஷியாவின் படையெடுப்பை தொடர்ந்து, உக்ரைன் மருத்துவ கல்லூரிகளில் படித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் பயின்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தலைநகர் புவனேஷ்வரில் திரண்டு போராட்டம் நடத்தினர்.எங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்வும் , என்.எம்.சி விதிகளை திருத்தி இந்திய பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய மாணவர்கள், "நாங்கள் மருத்துவ படிப்பை தொடர இந்திய பல்கலைகழகங்களில் அனுமதிக்க வேண்டும். எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மீண்டும் செல்ல முடியாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.