ஜன.22ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மதியம் வரை செயல்படாது - மருத்துவமனை நிர்வாகம்


ஜன.22ம் தேதி டெல்லி எய்ம்ஸ்  மதியம் வரை செயல்படாது - மருத்துவமனை நிர்வாகம்
x

ஜனவரி 22-ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

புதுடெல்லி,

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த 15-ந்தேதி நிறைவடைந்தது. அதன்பின் ஜனவரி 16-ந்தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

இதனிடையே ஜனவரி 22-ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 'அதிகமான உணர்வுகளை' கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவையொட்டி, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்று முதன்மை மருத்துவ நிறுவனம் இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து முக்கியமான மருத்துவ சேவைகளும் செயல்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story