இந்திய பயணம்: தாஜ்மஹாலை நேரில் கண்ட பாக். முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் முதல் கேள்வி...?


இந்திய பயணம்: தாஜ்மஹாலை நேரில் கண்ட பாக். முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் முதல் கேள்வி...?
x
தினத்தந்தி 6 Feb 2023 12:30 PM IST (Updated: 6 Feb 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

தாஜ்மஹாலை பார்த்த அந்த தருணத்திலேயே அதன் மீது முஷரப் காதலில் விழுந்துவிட்டார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல்நல குறைவால் நேற்று உயிரழந்தார். அவருக்கு வயது 79.

'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முஷரப் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ராணுவ ஆட்சி மூலம் பாகிஸ்தானை கைப்பற்றிய முஷரப் 2001 முதல் 2008 வரை அந்நாட்டின் அதிபராக செயல்பட்டார்.

2001-ல் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது முஷரப் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அந்த சமயத்தில் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பணியாற்றி வந்தார்.

2001 இந்திய பயணத்தின் போது முஷரப் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை தனது மனைவியுடன் பார்வையிட்டார். தாஜ்மஹாலை நேரில் பார்த்த முஷரப் கேட்ட முதல் கேள்வி என்ன என்று தகவல் வெளியாகியுள்ளது.

முஷரப் தனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட வந்த போது அந்த சமயத்தில் ஆக்ரா பகுதி தொல்லியல்துறை அதிகாரியாக இருந்தவர் முகமது. அவர் தலைமையிலேயே முஷரப் தனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார்.

தாஹ்மலாலை நேரில் பார்த்த முஷரப் கேட்ட முதல் கேள்வி குறித்து அவரை வழியாட்டிய அப்போது தொல்லியல் துறை அதிகாரி முகமது கூறுகையில்,

தாஜ்மஹாலை பார்த்த அந்த தருணத்திலேயே அதன் மீது முஷரப் காதலில் விழுந்துவிட்டார். தாஜ்மஹாலை வடிவமைத்தது யார்? என்பது முஷரப் என்னிடம் கேட்டார்.

நான் ஷாஜகான் என்று கூறுவேன் என முஷரப் எதிர்பார்த்தார். ஆனால், தாஜ்மஹாலை வடிவமைத்தது பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த உஸ்தப் அகமது லஹோரி என்று நான் அவரிடம் கூறினேன்' என்றார்.


Next Story