திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா


திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
x
தினத்தந்தி 24 Sep 2023 6:48 AM GMT (Updated: 24 Sep 2023 7:40 AM GMT)

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. . 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கஜ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.

அப்போது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 4 மாட வீதிகளில் கலைநிகழ்ச்சிகளை செய்து காட்டி பக்தர்களை பரவசப்படுத்தினர். இதேபோல் கேரளா கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து கரகாட்டம் ஆடினர்.

தெய்வ திருவுருவங்களுக்கு பின்னணியில் அரைவட்ட வடிவில் திகழும் அமைப்பை `பிரபை' என்பார்கள். பிரபை என்ற சொல்லுக்கு ஒளி என்பது பொருள். சூரிய ஒளி கற்றையை `சூரிய பிரபை' என்றும், சந்திரனின் ஒளி வெள்ளத்தை `சந்திர பிரபை' என்றும் சொல்வர்.

இந்நிலையில் விழாவையொட்டி இன்று 7-வது நாளான காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.


Next Story