கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்; கடந்த 10 நாட்களில் ரூ.757 கோடிக்கு மது விற்பனை


கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்; கடந்த 10 நாட்களில் ரூ.757 கோடிக்கு மது விற்பனை
x

கடந்த 10 நாட்களில் மட்டும் 757 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை களைகட்டிய நிலையில், அங்கு மதுபான விற்பனையும் அதிகரித்துள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 757 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அதிகபட்சமாக ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாளில் மட்டும் 121 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story