செல்போன் போன்ற அனைத்து 'கேட்ஜெட்களுக்கும்' ஒரே சார்ஜர் - நிறுவனங்களுடன் விவாதிக்க மத்திய அரசு முடிவு


செல்போன் போன்ற அனைத்து கேட்ஜெட்களுக்கும் ஒரே சார்ஜர் - நிறுவனங்களுடன் விவாதிக்க மத்திய அரசு முடிவு
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 9 Aug 2022 6:16 PM GMT (Updated: 9 Aug 2022 6:18 PM GMT)

இது குறித்து தொழில்துறையினருடன் ஆகஸ்ட் 17 அன்று விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு கேட்ஜெட்களுக்கும் பொதுவான ஒரு சார்ஜரை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இது குறித்து தொழில்துறையினருடன் ஆகஸ்ட் 17 அன்று விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கும், மின்-கழிவுகளைத் தடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறும் போது, "ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த சேவை சாத்தியம் என்றால், இந்தியாவில் ஏன் அதைச் செய்ய முடியாது? ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.


Next Story