இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தோற்பது நிச்சயம் - முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர்


இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தோற்பது நிச்சயம் - முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர்
x

இமாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சிம்லா

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் கடந்த 12-ந் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இமாச்சல பிரதேசத்தில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலத்தில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாக இருக்கலாம். மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர், இது ஒரு நல்ல விசயமாகும். மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று சொல்லலாம். அனைத்து கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.க.வின் வெற்றியை சுட்டிக்காட்டுகின்றன. காங்கிரஸ் சொல்வதை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஒரு வழியாக வெற்றி பெறுகிறோம் என்று என்னால் சொல்ல முடியாது அல்லது காங்கிரசால் அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் தோல்வியடைவது நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story