கர்நாடகாவில் அடுத்த ஆண்டு எங்களுடைய கல்வி கொள்கை கொண்டு வரப்படும்; துணை முதல்-மந்திரி பேட்டி


கர்நாடகாவில் அடுத்த ஆண்டு எங்களுடைய கல்வி கொள்கை கொண்டு வரப்படும்; துணை முதல்-மந்திரி பேட்டி
x

கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கைக்கு பதிலாக அடுத்த ஆண்டு எங்களுடைய கல்வி கொள்கை கொண்டு வரப்படும் என துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, துணை வேந்தர்கள் மற்றும் எங்களுடைய அதிகாரிகள் உள்பட பல்வேறு கல்வியாளர்களுடன் கர்நாடக அரசு கூட்டம் ஒன்றை நடத்தியது.

புதிய கல்வி கொள்கை 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திலும் அதில் ஆர்வம் காட்டப்படவில்லை. அதனை அமல்படுத்தவும் முன்வரவில்லை.

கேரளா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை நிராகரித்து விட்டன. அனைத்து அம்சங்களிலும் நாங்கள் ஆய்வு செய்து விட்டோம். புதிய கல்வி கொள்கையை நாங்கள் முடிவுக்கு கொண்டு வர போகிறோம்.

அடுத்த ஆண்டு எங்களுடைய கல்வி கொள்கை கொண்டு வரப்படும் என துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.


Next Story
  • chat