தெலுங்கானாவில் தொடர் கனமழை: 19 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைப்பு


தெலுங்கானாவில் தொடர் கனமழை: 19 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைப்பு
x

image courtesy: PTI

https://www.dailythanthi.com/News/India/heavy-rains-in-telangana-chief-secretary-directs-collectors-to-take-all-preventive-measures-742585

மாநிலத்தில் உள்ள 223 முகாம்களில் மொத்தம் 19,071 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் தொடர் மழை பெய்து வருகிறது.தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது. கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் 14, 15, 16 ஆகிய தேதிகள் வரை மேலும் 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 19,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள 223 முகாம்களில் மொத்தம் 19,071 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ராத்ரி-கொத்தகுடம் மாவட்டத்தில் 6,318 குடும்பங்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், முலுகு மற்றும் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் முறையே 4,049 மற்றும் 1,226 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


Next Story