சம்பா பருவ நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1,71,000 கோடி வழங்கப்பட்டது - மத்திய அரசு தகவல்
சம்பா பருவ நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1,71,000 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
2022-2023-ம் ஆண்டு சம்பா பருவ நெல் கொள்முதலை மத்திய அரசு சீராக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 19-6-2023 வரை 830 லட்சம் டன் நெல், மத்திய தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொள்முதலில் இதுவரை 1.22 கோடி விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயை குறைந்தபட்ச ஆதாரவிலையாக வழங்கி உள்ளது. இந்த தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு எதிராக அரிசி வினியோகமும் நடைபெற்று வருகிறது. இதைப்போல கோதுமை கொள்முதலும் சீராக நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story