பாகிஸ்தான் இளம்பெண் நாடு கடத்தல்


பாகிஸ்தான் இளம்பெண் நாடு கடத்தல்
x

உத்தரபிரதேச வாலிபரை காதலித்து மணந்த பாகிஸ்தான் இளம்பெண் நாடு கடத்தல் செய்யப்பட்டார்.

பெங்களூரு:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முலாயம் சிங். இவர் பெங்களூருவில் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முலாயம் சிங்கும், பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜுவானி என்ற இளம் பெண்ணுக்கும் ஆன்லைனில் ஜூடோ விளையாட்டு விளையாடும் போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பாகிஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு வந்த இக்ராவை முலாயம் சிங் திருமணம் செய்து கொண்டார். பின்னர் நேபாள எல்லை வழியாக தனது காதல் மனைவியை இந்தியாவுக்கு அவர் அழைத்து வந்தார். பின்னர் பெங்களூருவில் 2 பேரும் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தனர்.

தனது மனைவி பெயரில் போலியாக ஆதார் அட்டையையும் முலாயம் சிங் வாங்கி இருந்தார். இதற்கிடையில் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில் கடந்த மாதம் 23-ந் தேதி பாகிஸ்தான் இளம்பெண்ணான இக்ராவை பெங்களூரு போலீசார் கைது செய்திருந்தனர். அவர் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இக்ராவை பெங்களூருவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்த பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக மத்திய அரசிற்கும் தகவல் அனுப்பினார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் பெங்களூருவில் இருந்து அமிர்தசரஸ் வழியாக பாகிஸ்தானுக்கு இக்ரா நாடு கடத்தப்பட்டுள்ளார். காதல் கணவரை பிரிந்து அவர் பாகிஸ்தானுக்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story