பலவீன நிலையில் பாகிஸ்தான்; ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப எடுத்து கொள்ளும் நேரமிது: காங்கிரஸ் கட்சி


பலவீன நிலையில் பாகிஸ்தான்; ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப எடுத்து கொள்ளும் நேரமிது: காங்கிரஸ் கட்சி
x

பாகிஸ்தான் பலவீனமடைந்து உள்ளது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் திரும்ப எடுத்து கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.



புதுடெல்லி,


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் உத்தரகாண்டின் முன்னாள் முதல்-மந்திரியான ஹரீஷ் ராவத் செய்தியாளர்களை சந்தித்து இன்று கூறும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் திரும்ப எடுத்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை என கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அரசாட்சியின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் திரும்ப எடுத்து கொள்வதற்கான முன்மொழிவு ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசின் செயல்திட்டத்தில் ஒன்றாகவும் இது இருக்க வேண்டும். பாகிஸ்தான் தற்போது பலவீனமடைந்து உள்ளது. அதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் திரும்ப எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story