ஆன்லைனில் மலர்ந்த காதல்... இந்தியரை மணந்த பாகிஸ்தான் இளம்பெண் - சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீசார்


ஆன்லைனில் மலர்ந்த காதல்... இந்தியரை மணந்த பாகிஸ்தான் இளம்பெண் - சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிய போலீசார்
x

பாகிஸ்தான் பெண்ணான இக்ரா ஜீவானி, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரிய வந்தது.

பெங்களூரு,

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இக்ரா ஜீவானி என்ற பெண்ணுடன், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் முலாயம் சிங்குகிற்கு ஆன்-லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து பாகிஸ்தான் பெண்ணான இக்ரா ஜீவானி இந்தியாவிற்கு வர முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு விசா கிடைக்காததால், நேபாளத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று இக்ராவை சந்தித்த முலாயம் சிங், அங்கேயே சட்டவிரோதமாக திருமணம் செய்துக்கொண்டு இக்ராவை இந்தியாவிற்கு அழைத்துவந்துள்ளார்.

பின்னர் இருவரும் பெங்களூருவிற்கு வந்து குடும்பம் நடத்தியுள்ளார். அங்கு ஒரு இந்து பெண்ணாக வாழ்ந்த இக்ரா, அவ்வப்போது தொழுகை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது இக்ரா ஜீவானியின் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். பாகிஸ்தான் பெண்ணான இக்ரா, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரிய வந்தது. இதையடுத்து இக்ரா ஜீவானி, பஞ்சாப் அழைத்துச் செல்லப்பட்டு வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.



Next Story