காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை


காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம்

காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு,

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் பாலாகோட் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் வழக்கமான பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் ஊடுருவ முயன்றார்.

பாதுகாப்பு படையினர் திரும்பத்திரும்ப எச்சரித்தும் அவர் நிற்காததால் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து அந்த நபர் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் குண்டு காயம் அடைந்த அவர், பலியானார்.

அதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


Next Story