சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 'பாஸ்டேக்' மூலம் பார்க்கிங் கட்டணம்..!


சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாஸ்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம்..!
x

நிலக்கல் பார்க்கிங் மையம் ‘பாஸ்டேக்’ உடன் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலக்கல் பார்க்கிங் மையம் 'பாஸ்டேக்' உடன் இணைக்கப்பட உள்ளது.

'பாஸ்டேக்' மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10-ந்தேதி நிலக்கல்லில் டோல்கேட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான நேரமும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



1 More update

Next Story