பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2024-வரை நீட்டிப்பு


பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2024-வரை நீட்டிப்பு
x

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்கலாம் வரும் 2024- ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன.இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கிவிட்டது.

இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநாகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் ஜனவரி 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பாஜகவின் செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் வரும் 2024- ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story