பயணிக்கு நெஞ்சுவலி: விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கம்


பயணிக்கு நெஞ்சுவலி: விமானம் அவசரமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கம்
x

விமானத்தில் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

ஜெய்ப்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவுக்கு ஒரு இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் இரவு சென்றது. அந்த விமானத்தில் சென்ற ஒரு 23 வயது வாலிபருக்கு நடுவானில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கு விமானி அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது.

குறிப்பிட்ட பயணி விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அதன்பிறகு நள்ளிரவு 1 மணிக்கு அந்த விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டுச் சென்றது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பயணியும் முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு நேற்று பெங்களூருவுக்கு ஒரு விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story