'மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்' - பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ


மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம் - பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ
x

தனது அரசியல் வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்தவர் மகாத்மா காந்தி என்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்தியாவிடமிருந்து ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பெற்றுக்கொண்டார். முன்னதாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இது குறித்து பேசிய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, "மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிப்பூர்வமான அனுபவம். நான் தொழிலாளர் இயக்கத்தில் இருந்தபோது பல ஆண்டுகளாக நான் பின்பற்றிய அகிம்சை போராட்டத்திற்கு முன்மாதிரியாக விளங்கியவரும், எனது அரசியல் வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்தவரும் மகாத்மா காந்தி தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு அஞ்சலி செலுத்த கிடைத்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.


Next Story