மராட்டியத்தில் தண்ணீருக்காக உயிரை பணயம் வைக்கும் மக்கள்: மனதை உலுக்கும் பரிதாப காட்சிகள்


மராட்டியத்தில் தண்ணீருக்காக உயிரை பணயம் வைக்கும் மக்கள்: மனதை உலுக்கும் பரிதாப காட்சிகள்
x

மராட்டிய மாநிலத்தில் உயிரைப் பணயம் வைத்து தண்ணீர் பிடிக்கும் பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் உயிரைப் பணயம் வைத்து தண்ணீர் பிடிக்கும் பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அங்குள்ள கதியால் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அந்த கிராமத்தில் உள்ள 2 பெரிய கிணறுகளும் வற்றிவிட்ட நிலையில், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் எடுத்துவரப்பட்டு கிணற்றுக்குள் செலுத்தப்படுகிறது. அதனை கிணற்றின் பக்கவாட்டில் நின்று, ஆபத்தான முரையில் கிராம மக்கள் பிடித்து வருகின்றனர்.

உயிரைப் பணயம் வைத்து, ஒரு வாளி தண்ணீருக்கே கிராம மக்கள் அல்லல்படும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


Next Story