3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த பெரியப்பா கைது


3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த பெரியப்பா கைது
x

ராமநகரில் 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த பெரியப்பாவை போலீசார் கைது செய்தனர்.

ராமநகர்:

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா டவுன் பகுதியை சேர்ந்தவர் சாதீர் (வயது 29). இவரது சகோதரர் அதே பகுதியில் வசிக்கிறார். அவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் சகோதரர் வீட்டுக்கு சென்ற சாதீர், 3 வயது குழந்தையை தனது வீட்டுக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு வரை அவர் குழந்தையை தனது சகோதரரிடம் கொண்டு வந்து கொடுக்கவில்லை.

நேற்று காலையில் குழந்தையை தூக்கி வந்தபோது உடலில் காயங்கள் இருந்தது. உடனடியாக குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக கூறினார். அப்போது சாதீர், குழந்தையை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சாதீரை போலீசார் கைது செய்தனர்.


Next Story