சிறுவனை தனது நாய் கடிப்பதை வேடிக்கை பார்த்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு


சிறுவனை தனது நாய் கடிப்பதை வேடிக்கை பார்த்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு
x

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் தான் செல்லமாக வளர்த்து வரும் நாய், சிறுவன் ஒருவனை கடித்த போதும், நாயின் உரிமையாளரான பெண் ஒருவர் நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்ப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்,

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் தான் செல்லமாக வளர்த்து வரும் நாய், சிறுவன் ஒருவனை கடித்த போதும், நாயின் உரிமையாளரான பெண் ஒருவர் நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்ப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்தப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ராஜ்நகர் எக்‌ஷ்டன்ஷன் பகுதி அருகே சார்ம்ஸ் கேஸ்டில் சொசைட்டி என்ற குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மேல் தளங்களுக்கு செல்ல லிப்ட் வசதியும் உள்ளது. அந்த வகையில், லிப்டிற்குள் பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாயுடன் ஏறியுள்ளார். லிப்டிற்குள் ஏற்கனவே நின்று கொண்டிருந்த சிறுவன் நாயை பார்த்ததும் அச்சப்பட்டு சற்று விலகிச்சென்றான். இதைக் கவனித்த நாய், சிறுவனை காலில் கடித்தது.உடனே சிறுவன் வலியால் அலறினான்.

ஆனால் இதையெல்லாம் சற்றும் அசட்டை செய்யாத அந்தப்பெண், மாறாக சிறுவனை திட்டுவது போல தெரிகிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளரான பெண்ணுக்கு எதிராக காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story