அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்: பிரதமர் மோடி


அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்: பிரதமர் மோடி
x

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

புதுடெல்லி.

பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் எனும் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விண்வெளித்துறையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. 21ம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினேன். என்னுடைய இந்த கருத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் எனக்கு பலவிதமான ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர்" என்றார்.

1 More update

Next Story