பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்


பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
x

பங்கஜ் உதாஸ் இறப்பு இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பழம்பெரும் கசல் பாடகர் பங்கஜ் உதாஸ் (வயது 72) இன்று காலை உடல் நிலை குறைவு காரணமாக் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பங்கஜ் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணிக்கு உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பங்கஜ் உதாஸின் இழப்பிற்காக நாங்கள் துக்கப்படுகிறோம், அவரது பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் அவரது கசல்கள் ஆத்மாவுடன் நேரடியாக பேசுகின்றன. அவர் இந்திய இசையின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார், அதன் மெல்லிசை தலைமுறைகளைத் தாண்டியது. பல ஆண்டுகளாக அவருடனான எனது பல்வேறு தொடர்புகளை நினைத்து பார்க்கிறேன்.

அவரது இறப்பு இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார்.


Next Story