தெலுங்கானா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


தெலுங்கானா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ரேவந்த் ரெட்டி உரிமை கோரிய நிலையில், மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தெலுங்கானாவின் புதிய முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

தெலுங்கானா மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.


Next Story