இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாகியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்களின் ஆதரவுடன் பிரதமராக தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆக போட்டியின்றி தேர்வானார். இந்நிலையில் இங்கிலாந்து புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில்,
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
"மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷிசுனக்! நீங்கள் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், சர்வதேச விவகாரங்கள் மற்றும் 2030-ம் ஆண்டிற்குள் செயல்படுத்த வேண்டிய பணிகளில் இணைந்து செயல்படும் தருணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன். நமது வரலாற்று உறவுகளை நவீன கூட்டாண்மையாக மாற்றுவதற்கு வாழும் பாலமாக விளங்கும் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.