பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு  எவ்வளவு தெரியுமா?
x

வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் மோடியின் சொத்து விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

வாரணாசி,

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் தனது சொத்துவிவரங்கள் அடங்கிய பிராமணப்பத்திரத்தையும் மோடி தாக்கல் செய்துள்ளார். அதன்விவரம் வருமாறு:பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடியாக உள்ளது. அவருக்கு அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை. சொந்தமாக கார் இல்லை.

மோடியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் உயர்ந்துள்ளது. மோடிக்கு சொந்தமாக வீடு இல்லை. கையில் ரொக்கமாக ரூ.52 ஆயிரம் வைத்துள்ளார். அதேபோல வங்கிகளில் வைப்புத்தொகையாக ரூ. 2 கோடியே 80 லட்சம் வைத்துள்ளார். மோடியிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் பெரும்பாலும் அசையும் சொத்துக்களாகவே உள்ளது. அசையா சொத்துக்கள் பெரிதாக உள்ளது. மோடியிடம் நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன.எம்.ஏ முதுகலை பட்டம் பெற்று இருப்பதாக மோடி தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

1 More update

Next Story